சனி, 30 டிசம்பர், 2017

என் ஊர் பயணம்




தைத்த நூல் தளர்ந்து காற்றை கதர் கடக்க செய்ய,

தலை கோதிய பொதிகையவள் புது காட்சி நித்தம்தர,

காற்றின் குளிர்ச்சியில் நினைவது சுத்தம் பெற,

உரைக்காற்றின் உருக்கம் உருகாமல் இறுக்கி வைக்க,

சூத்திரம் மறந்தது , என்னவள் காட்டும் புவியின் திறம் காண;

வரவேற்ற கொதிக் காப்பி நாவில் வார கணக்காக மரவுதந்த நினைவு; மறவுர

புகைவண்டிக்கே புகை ஏற்றும் புனிதப் பயணியின் நடுவில்,

அவ்வூர் இவ்வூர் என பெரும் கூச்சலுக்கிடையில்

ஊறும் உறக்கமற்ற உறைப்பொருள் நான்...


#வினித் மணிமாறன்

செவ்வாய், 19 டிசம்பர், 2017

கடற்கரைச் சுவடுகள்




அவள் நினைவில்

நிழலிலமர்ந்த வேளை

சோடிகள் கூடக்கான

கோடி காதல் கண்டும்

ஆழி ஆவென்றிறைந்தது... 

வீழும் சூரியொளி

ஆழிக்கரையோரம் பதிந்த 

சுவடுகளில் நிழல் நிரப்புகிறது ... 

அசைக்கும் குளிர்நீர் பாதங்களை 

நனைத்தும் நுரைத்தும் அசையா 

துளிமண்ணாய் மன்னவன்... 

திடீரென உயிர் பெற்ற சவமாய் 

திடுக்கிட்டு திரும்புகிறான்... 

மன்னவள் பெயருடைய சிறுமியை 

யாரோ ஒரு தாய் உவரும் காற்றில் 

உராயாமல் கரைக்க....

#வினித்_மணிமாறன்

திங்கள், 11 டிசம்பர், 2017

வீழும் பாரதிகள்


வயிற்றின் தாகம் தீர்க்க மண்ணில் ஏரிழுத்தவன்,
ஏறித் தொங்கியும்; அவ்வெடை உணராத தூக்கு கயிறு,

சுழலும் பூமியில் நகரா நகரனாய்,
வாழ உண்ணாமல்; உண்ண வாழ்கையில்,
தன் அடைப்பை நீக்க தெரியாத இதயத் தமணி,

இந்நாட்டான் இழிவடைந்தான் கடல்கடந்து ,
இனமொன்று பினமாக ,
கணம் கணம் சினம் ஏற,

இவ்வெரிச்சல் போதாதென, வலையவன் வீசயில்,
விசைப்படகுகள் ஏந்திய தோட்டாக்கள் தான் எத்துனை !

இதைப் பேச , செவுடனான மாநிலன்,
அவனை வைத்து சாதுர்ய சதுரம் ஆடும் மத்தியன்,

இதற்கிடையில் பிடிமண்ணுக்கும் கை விரித்த காவிரிக்கும்
போராடும் பாரதிகள்,

பிடி மிதித்தே சாகலாம் !


#வினித் மணிமாறன்

சனி, 9 டிசம்பர், 2017

80ஆம் பிறந்தநாள் வாழ்த்துரை

வீரம்மா பெற்றெடுத்தாள்,

வீரமாய் பெற்றெடுத்தாள்!

தகப்பனின் தனிச்சொத்து,

செல்வமாய் பெற்றெடுத்து,

செல்லமாய் இவர் வளர,

செந்தில்நாதனும் பூரித்திருப்பான் !

பழநியின் வேல் கண்டு !

செறுப்பற்ற நடை , செருகற்ற குணம்,

இவ்விரண்டும் இவர் இயல்பு !

தந்தை தாயறிய,

வேலனுக்கு வள்ளி வந்தாள்,

இருவரை கவனிக்க;

இருமூன்றை பெற்றெடுத்தாள்,

இரும்பின் இயற்பியல் !

பெயரன் பெயர்திக்கு,

சோறூட்ட பிசைகையில்,

அண்ணமும் தேன் ஏறும்,

அனுதினமும் நாவூரும்,

அதட்டி தொடை கில்லையிலும்,

தட்டி பொறை நீக்கயிலும்,

இவள் பித்தம்,

வேண்டும் நித்தம் !

புகையாடுப்பு மூட்டையிலும்,

புகையிலையை உருட்டையிலும்,

கூன் கிழமும் கோகிலம் தான் !

பத்தை தீட்டினாலும்,

நான் பத்திரைக்க திட்டினாலும்;

அன்னமொத்த குணவதி,

திண்ணம் அதை நினைவரியும் !

எம்புட்டு வளர்ந்தாலும்,

என் வாயூட்ட நீர் வேண்டும்,

நீர் கடந்த எண்பத்து பத்தாது ,

என் பிள்ளை பத்து வரை,

பாத்திருந்து கொல் அடைக !

#வினித் மணிமாறன்

புதன், 6 டிசம்பர், 2017

புரியாக் காதலின் காதலி


கிழிந்த இதயம்,

விழிக்கசியச் செய்ய;

கழிந்த நாட்கள்,

களைய மறுக்கிறது,

மறுத்தவளின் மருந்தற்ற

மருத்துவ முறையால் !

#வினித் மணிமாறன்

கேட்பார்


மீண்டும் இந்த பாதையில் 
திரும்ப போவதில்லை,
என்றானபின் விட்டுச் செல்லும்
வழித்தடத்தின் மீது, உங்களுக்கென்ன
அக்கரை வேண்டிகிடக்கிறது ?
அது ஊர் கூடும் சந்தையின் ,
எதோ ஒரு மூளையில்
தாயிக்காக ஏங்கி கிடக்கும்
பொட்டை நாய் குட்டிகள் போல்,
கேட்பாரற்று கிடக்கும்...

#ஹரிசரண்

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தமிழை அறிந்த நொடி


பிறந்து முதல் துளி பால் அருந்தும் முன்னே,

என் தந்தை என்னை பற்றி அறியும் முன்னே,

என் உடலின் உறுப்புகள் தோன்றும் முன்னே,

ஒரு செல் உயிரியாய் நான் வீற்றிருந்த கணத்தில்,

என் தாயின் கன்னங்கள் மகிழ்ச்சியில் செறிவடைந்து,

கண்ணில் முதல் சந்தோச கண்ணீரை சிந்த,

அது அவளது வயிற்றில் வந்து வீழ்ந்த பொழுது,

அந்த கண்ணீரின் இதம் கூறியது என் நாவின் உயிர்,

தமிழ் என்று…

#வினித்_மணிமாறன்


அவளை கண்ட நொடி


ததும்பும் பார்வையில் தழுவும் மனம்,

தும்பிருந்தும் பற்றா கன்றென,

கம்பனவன் கண்ட கணையாழிக் காதல்!

கண்டவுடன் கரைகடக்கும், கடிந்தவள் பார்க்கையில்!

அவள் கூந்தல் ஏந்தும் மலர் வீழ்ந்ததும் வாடியது,

உதிர்ந்த மயிரின் உயிர், கணத்தில் மறைந்தது!

சிறைந்த மனம், சிக்கி சிதையுமொலி;

கேட்டும் கடிவாளம் கழழா இதயமொழி ~ அவள்

#வினித் மணிமாறன்

புதன், 29 நவம்பர், 2017

அவனது விழி


மலைமுகட்டில் அவன் மடியில்

மடிந்த கணம்,

வீழ்க்கதிரின் வீரியம் விழித்திரைக்கு விக்கல் தர,

விரியும் கருவிழியில் கதிரவனும்,

கார்முகில் தான் !

இமையது இமையுற இதயதிர்வு இன்மையாகும் !

பன்மை இருந்தும் இவ்வொருத்தியின் ஒருமை தேடும்,

கதகதப்பிற்குக் கோர்தாலும் ,

கதைகதைக்கக் கோர்த்தாலும் ,

கை ரேகை கரைந்தினையும்,

கவியனவனின் கண் காட்சியில்!

#வினித் மணிமாறன்

செவ்வாய், 28 நவம்பர், 2017

மழையில் காதலி


நின்னை நினைத்து,
பாருலகம் நனைக்கும்;
கார்கால மழையும்,
பேர் காலம் சென்ற தாயாய்,
ஏக்கம் கொள்கையில்,
மழை தன் உயிர் துறந்ததன்,
ஆயுள் விரக்தி பெற,
மழையை நனைக்க சென்றாயோ !
#வினித் மணிமாறன்

என்னவள்


என் வலைப்பதிவின் பதிவவள் ,

என் தீ கண்ட திரௌபதியும் அவள் !

காணகண்ட கண்ணகி அவள்,

நான் கனாக்கொண்ட கவிதைவள் !

நிலா மூடும் மேகம் அவள் ,

விழும் மழையின் தேகம் அவள் !

பிறைகாணா நிலவும் அவள்,

பிறர் காணா அழகின் சிலவும் அவள் !

கதிரவன் காண செழுக்கும் செந்நெல் கதிரவள் !

சினம்கொண்ட சிங்கம் அவள் ,

இனம்காணா அங்கம் அவள் !

தங்கம் செரிக்கும் அணியவள்,

என்கண் உவமை சேர்க்கும் அணி அவள் ~ என்னவள்

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 26 நவம்பர், 2017

பாரதி ~ மாத்தமிழ் கவி


பிறப்பு எனும் சிறப்பினை எய்தி,

பொறுப்பு எனும் வெறுப்பினைத் தாங்கி,

சிரிப்பு எனும் செழுமையை மறந்து,

தமிழனாக தமிழை இறைந்து,

இறப்பு எனும் முழுமையை அடைந்தான்; பாரதி !

பிடி மிதித்து தமிழ் இறந்தது அன்று ! ஆனால்,

படிக்கும் தமிழே மறந்தது இன்று ! 

இயலிசையில் சிறந்த எம்தமிழ்,

என்றும் உங்கள் அயல் அசையில் அடங்காது ! 

இன்று தூங்கும் செந்தமிழ் மொழி !

ஒருநாள் ஓங்கும்,

அன்று.....

இச்செந்தமிழனின் கை அதைத் தாங்கும் ! 

- வினித் மணிமாறன்

கண்ணாடி


பலரும் எனக்கு பொய்ப்புகழ் சூட,

என்முன் நின்றால் நானாய் நின்று,

தன்மேல் படரும் சூட்டினை,

பிம்பத்தில் கடத்தி,

என் முகம் இதுவென பளிச்சிட்டு காட்டி,

பிரதிபளிக்கும் பண்பது இருந்தும்,

பிறர் தீ பலிக்காமல்,

இதுவரை எப்பாதமும் காணாத பாதரசத்தின் பண்பு ~ கண்ணாடி

#வினித் மணிமாறன்

காதல் தோல்வி ~ மது


போதை இல்லாமல் என் ராதை செய்த அறுவை சிகிச்சைக்கு ....

நான் போதை ஏற்றுகிறேன் ~ மதுவாய் 

#வினித்_மணிமாறன்

தமிழினத் தலைவன் பிரபாகரன்


வாழ்ந்த சரித்திரம்,

வீழ்ந்தும் ஒலித்தது,

தினங்கள் ரணமாக,

இனத்தலைவன் பிணமாக,

என் இனம், ஈனம் ஆனது !

மானம் கழிந்து வீழ்ந்த பொழுதும்,

மாத்தமிழன் வருவானென்றேன் !

தமிழாயிரம் பிறப்பு கண்டும் ,

மீண்டும் பிறவாத கலியுக கர்ணன் ~ பிரபாகரன் !

#வினித் மணிமாறன்

சனி, 25 நவம்பர், 2017

பொறியியல்


எட்டில் தெரிகிறது எட்டுத்திக்கின் இயக்கவியல்,

ஆயக்கலையென எழுதப்படும் படைப்பாற்றல்,

வீழ்ந்தெழுந்த பொழுதெல்லாம் தூற்றல்கள்,

வறட்சியிலும் வருத்தமில்லை,

வறண்ட பொழுதும் வருந்தவில்லை !

விளைந்தும் வேலையில்லை ;

விலைத்தரா வேளையில்லை !

காதலும் கடந்ததுண்டு,

என் காதலிக்கும் தெரியாமல் !

குடும்பம் அறியாத விடயங்கள் பலவிருந்தும்,

நடுத்தரம் நாகரீகமென நாடும் நான்காம் வாய்ப்பாடு - பொறியியல் !

#வினித் மணிமாறன்

பெண்ணின் முதல் காதல்


நில்லாமல் பேசும் நீலகடலலை அவன் நட்பு !

அனைத்திலும் அவன் மொழி,
என் நினைவுகள் அவன் வழி !

என் சிரிப்பில் மீமிசை அவன்,
என் சோக இயலிசை அவன் !

காரணியாய் கணமிருந்து,
தோழமையில் தினமிருந்து ,

பிறப்பெண்ணிடம் அவன் பேச
என் பிரபஞ்சம் புகைந்திடுமே !

புகையதை அணைப்பதிலும்,
என் வலியதிலே அணைப்பதிலும்,
கைதேர்ந்த கள்வன் அவன் !

இது காதல் என்றுணர ,
அவன் பிரிவும் காரணியே ;

பலநட்பு பூண்டாலும் ,
சூழ்ச்சியிலே மாண்டாலும்,

அவன் காதல் பலவிருந்தும்
என் முதல் காதல் அவன்தானே !

#வினித் மணிமாறன்

கத்தி


பிறப்பின் முன் ஒரு நொடி,
இறப்பின் முன் ஒரு நொடி,

கிழிக்கும் சதை பிகுந்து,
ரத்த நாலம் களைந்து,

குருதியை தெறிக்க வல்லோன் !

பயணியின் பணியில் சற்றும் கண்ணயர்ந்தால்

நொடியில் பிளவிட்டு தண்டிக்கும்
சினவாலன் !

சினத்துடன் எதிரியிடம் எடுபொருள் இவனானால் ,

அவனாயுள் முடிபொருளும் இவனே - கத்தி....

#வினித் மணிமாறன்

வெள்ளி, 24 நவம்பர், 2017

ஆணின் முதல் காதல்


முந்நாள் வீழ்ந்த சூரியன்  உதிக்க மறக்க,

தீண்டும் தென்றலில் ஈரம் இருக்க,

எனை தாண்டும் பேதை;
விழியால் போதை ஏற்ற,
மயங்கினேன் மங்கையவள் பேரழகில் !

ஒரு நொடியில் ஆயுள் கடந்து,
ஒளி ஆண்டை ஏலனிக்க,

நொடியில் விடியலை செவியுணர,

முயன்றும் தோற்றேன் அவளை தொடர ;

மங்கும் ஒளியில் அவள் உருவம் படர,
வீழும் விண்மீனாய் மறைந்தாலும்,

அவள் எந்தன் முதல் காதலே !

#வினித் மணிமாறன்

பொய்யான நட்பு


கண்முன் இழித்து, என்பின் பழித்து,

என்னை பிறரிடம் இகழும் நண்பா !

உன்மை மிளிர உடைகிறேன் நான் ,

உன் மை கரைந்த கறையடா நீ !

பலருடன் கரைந்தாலும், சிலருடன் இணைந்தாலும்,

நீ கறையுரும் நாள் என்னிடம் வா !

#வினித் மணிமாறன்

ஒருதலை காதல்


கவரும் கண்ணது கண்ணத்தில் கசித்திட,

கலைந்து கடல்கடந்த கணமது கடைந்திட,

தூவளின் நினைவது துயில் துரத்த,

தூயவள் கடமையாய் எனைத் துரத்த,

ஏக்கம் நிறைந்த ஒருதலை என்நிலையானாலும்,

ஒரு கை இரு கையாகி இறுக்கையில் அமர

பொறுத்து வாழும் நாட்களில் வாழ்ந்தும் அமரன் நான் !

#வினித் மணிமாறன்

பொருள்
தூவள் - பெண்

பரணி - பெயர் கவிதை


உன் சிறுசிரிப்பும் ஒரு சிற்றிலக்கியம் !

சிதையா செம்மொழி செவியில் படர்கையில்,

கதையாய் கவிதையாய் வீழும் நாத்தாங்கி நீ !

என் நாளோங்கி, கதிரவன் வீழ,
ஏக்கம் தீர்க்கும் தனியூற்று நீ !

தமிழில் பலபொருள், ஒரு மொழி நீ !

கலகம் நிறைந்த இப்பாருளாகில்,
உன் பெயரின் பொருள் - என் உலகம் நீ !

#வினித் மணிமாறன்

பொருள் : பரணி என்ற சொல் .. தமிழில் ஒரு பல பொருள் ஒரு மொழி அதாவது ஒரே சொல் பல  பொருள்களை கொண்டது
நாதாங்கி - நட்சத்திரம் - பரணி
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
உலகம் என்ற பொருளிலும் வழங்க பெற்றது...

செவ்வாய், 21 நவம்பர், 2017

என் வழித்துணை


நகரும் காட்சிகள் உந்தன் நினைவை நிறைக்க,

உரைக்கும் காற்றில் எந்தன் தேகமயிர் விறைக்க,

உந்தன் எண்ணற்ற கனவை பறிக்க மறுத்தும்,

சிரிக்க மறக்கவில்லை !

நகரும் நொடிகள், உனை பிரிந்து நரக நொடிகளாக ;

இசைக்கும் இசையில் உம் நினைவுளை ஏற்றி,

பயணிக்கிறேன் முடியா பாதையின் முடிவில் தொடங்கி...

#வினித் மணிமாறன்

வியாழன், 9 நவம்பர், 2017

அவளது தூக்கம்

துயிலும் மயிலவள்

கயல் விழி மூடையில்

துயருண்டு வீழ்கிறேன்...

பின்;
வரலா காட்டில்,

வரமென பிறக்கிறேன்

விழியின் இமையது பிரிந்திட...

#வினித் மணிமாறன்

செவ்வாய், 7 நவம்பர், 2017

மழைத்துளி

மேகம் போர்த்திய வானம்
மோகம் பூச... ஆங்காங்கே கொசு கடியாய் மழை துளிகள்

வியாழன், 2 நவம்பர், 2017

காக்கையின் காதல் ஹைக்கூ (மோனை நயம்)


கரையும் காக்கையின் காதலும்,
கார் காலமழையில் கரையாமல் கசிகிறது...
#வினித் மணிமாறன்

கானல் நீரின் காட்சி அவள்

தாகம் தீர்க்கும் தாரிகையே,
கருமேகம் சூழ வந்தவளே,
காணுகின்ற காட்சி தனில்
எந்தன் காணொளியாய் வருபவளே.. 

காரணமே இல்லாமல், என் கானல்நீராய் ஆனதென்ன ?

எழுதாத வரிகள் வந்து,
எழுதிட சுணக்கம் தந்து,
கவிக்கடல் அளக்கயில்,
கண்ணிமைச்ச ஒத்த நொடி

நின் காட்சி இன்றி,
கண்ணிருண்டு செத்தேனடி..

#வினித் மணிமாறன்

செவ்வாய், 31 அக்டோபர், 2017

திங்கள், 30 அக்டோபர், 2017

மழைக்கால காதல்

கறையுடை நிலவை
உறைமேகம் போர்த்த,

சிறைவாசம் சென்ற இதயம்
சுவாசம் பெற உதய,

நனைக்கும் மழைத்துளியில்
நின்னை நினைத்தவாறு

கனைக்கும் தொண்டை,
நம்மை இனைக்கும் வரிகளை
உச்சரித்தவாறு ,

கனத்த கனவை கண் இமைக்குள்
சுமந்து ,
கவிதை கிறுக்கும் காகிதமாய் நான்....

#வினித் மணிமாறன்

சனி, 28 அக்டோபர், 2017

களவு போன நிலவு, காரணி என் காதலி

காதல் கார்மேகமாய் சூழ,
கற்பனை மழையாய் தூர,
நனைகிறேன் நினைவதன் நிழலிலே...

குடையென அவள் விடை,
என் தலையதை துடைக்க;

மடையனாய் சிரிக்கிறேன்,
அவளையே வெறிக்கிறேன்,
சுற்றம் மறக்கிறேன்..

நிலவும் பொறுமை இழந்து, நொடியில் பொறாமை அடைந்தது,
என்னவளின் தேகம் கண்டு..
மேகத்தை இடை மறித்து ,
தன் இடை புதைத்தது,
மஞ்சள் பூசி மெருகேற்ற முயற்சித்து,

தோல்வியில் கிரகம் பெயர்ந்தது...

#வினித் மணிமாறன்

சனி, 22 ஜூலை, 2017

நிறையா நினைவு

வரா கவிதை ,
மசைக்கும் மண்டையில் மண்டியிட ,
கணியா கனவுகளை சுமந்து வண்டியிட ,
கடக்கும் பாதையும் , அவள் நினைவால் கிடைக்கும் போதையும், காதலாய் காதலியாய் ; மனதிற்கு இதம் தர,

கடந்தது இவ்வழி(லி)யும் வழி(லி)யாமல் ...

புதன், 19 ஜூலை, 2017

தோழியின் மீது காதல்

நிலையில்லா வாழ்வில் நிலைத்த உருவெடுத்து,

நினைவுகள் மட்டும் என்கண் உரித்தெடுத்து;

உலவிடும் சிலையென, நித்திரையிலும் நின்னைவிதைக்கும்,

நட்பே !

ககரம் இல்லா உணர்வுகளை பகிர்ந்து ,

உதிரம் பகிராமல் உதிர்த்த உறவாகி ,

சிதறும் தருவாய் தனில் ,

நின்கண் காதல் கணிந்தாலும் ;

மறைத்து கண்ணீருடன் சிரிக்கும் சிரிப்பும் ஒட்டணியே !

சொல் விளக்கம்

ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும்.

இருண்ட தூக்கமில்லா இரவுகள்

விளக்கில்லா இருளில் விளக்கமில்லா கவிதையை தேடி...

இலக்குடன் விளங்கும் விலங்குகள் நடுவில்...

கவித்து தவித்திடும் கவிஞன் நான்..

#வினித் மணிமாறன்

வியாழன், 29 ஜூன், 2017

காதலர் தினம்

அலர் தந்து காதலை சொல்ல துடிக்கும் மனம் ;

என் கைபேசி அலறும் பொழுதெல்லாம் துடித்தது ;

கணதிற்கு கணம் வந்த கவிதைகள் ,
தினத்தை விதைக்க தவறவில்லை ;

வண்ணத்தில் மனதை வெளிப்படுத்த நினைத்தாலும் ,

எண்ணத்தில் துளைந்தது மனம்; என்னவளின் மாற்றத்தால் கலைந்தது  ;

இனம் புரியாத இனிமையான நினைவுகளுடன் ,

காதலும் கடந்தது ,
இன்றைய காதலர் தினமும் கடந்தது !

காதலின் சாரல் இல்லாமலே...

                                          #வினித்_மணிமாறன்

காதல் தோல்வி

நினைக்க மறவா மனம் ,
சுமையாய் சுமக்கிறது பிணைக்க முடியாத காதலை ;

காந்தமாய் ஈர்த்த அமிழ்து ,
இன்று கந்தகமாய் அமிலுது ;

அழைத்த இதயம் அலைய துணியுது  ,
தழைத்த காதல் கரையை கடக்க ;

இனிக்கும் கடந்தகாலம் , இணைக்க எண்ணினாலும் ;

கனியா வருங்காலத்தை,
கருத்தாய் கணித்தால் போலும் ...

                                         #வினித்_மணிமாறன்

ரயில் பயணத்தில் அவள்

புகைக்கும் ஊர்தி , நகைக்கும் குழந்தை ,
இப்படி தொடங்கிய பயணம் !

சன்னலுக்கு அருகே, குளிர் காற்றோடு பேசியப்படி நான் அமர்ந்திருக்க ;

சிணுங்கிடும் அலைபேசியை அணைக்க மறுக்கவில்லை ,

அவ்வப்போது கிறுக்கனாய் அதை கண்டு சிரித்தவாறு ;

மங்கும் ஒளியில் அங்கும் இங்கும் தேடுகிறேன் என் காதல் தேவதையை ...

                                            #வினித்_மணிமாறன்

அவளது நினைவுகள்

தூங்கா இரவுகள்,

உடைந்தும் மூழ்கா தோணியாய், மனம் தத்தளித்திட,

இதுவும் ஓர்வகை காதல் தான் என மனக்கட்டவிழ்த்திட ;

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பச்சோந்தி பாதை ;

மாற்றத்திலும் ,
அவளது நினைவுகள் ஏற்றும் போதை ;

விடியும் காலை விரட்டி அடிக்கிறது ,

காதலின் நினைவுகளை;

காற்றில் சிதறும் சிறு காகிதமாய்....

                                    #வினித்_மணிமாறன்

தந்தையர் தின வாழ்த்துக்கள்

கண்களால் கண்ட பொருளை ,

எண்களால் எண்ண முடியாத அளவுக்கு விளக்கிய தந்தயே...

அறவனைப்பால் என் அன்னையையும் முந்திச்சென்ற விந்தையே...

நான் வீழ்ந்த பொழுதும் , நான் தவறு செய்து என்னை ஊர் சூழ்ந்த பொழுதும்,

என்னை காக்க பின்னால் இருந்தவர் நீர்.....

என் நாள் பல இருந்தும் இன்று உன் நாள்....

இந்நாளைப் போல எந்நாளும், என் நாளை பொண்ணாக்க விரும்புகிறேன்....

குளிரும் இரவு

உறையும் குளிரை உறையாய் போர்த்தி,

வானின் கருமை என் உரையை ஏற்ற ,

நட்சத்திரமும் சோம்பலிட;

நிலவது களவாக..

கலந்திடும் காற்றில் உணர்கிறேன் நகரத்தில் , அகரத்தை...

அன்னையர் தின கவிதை

நிகரில்லா நிறை மதியே ,

என் வாழ்வின் பிறை விதியே !

என் எழுத்தின் காரணியே,

நான் செரிக்கும் பூரணியே !

குறையுடனே வாழ்ந்தாலும்,

குறையுண்டு வாழ்ந்தாலும் ;

நிறைவடையும் நினைவத்திலே,

நுன்னித்தம் நிறைந்தவளே !

வழியில்லா நேரத்திலும்,

என் வலியை பொறுத்தவளே !

வணங்கிட வார்தையின்றி,

சுணக்கத்திலும் சுமந்திடுவேன் !

என்னை சுழிக்காமல் சுமந்தவளை .......

கோயிலில் காதலி


ஆழியென குவிந்திடும் கூட்டம்,

விழியவள் முகம் தேடி கூட்டும்;

கோயிலில் தரிசனம் தேடி நின்ற தருணம்,

மனமோ கரிசனமின்றி நின்னை தேட,

மரத்த இதயம் இயக்க மறுக்க,

கண்டேன் தமிழின் மறு உருவை!

தமிழாய் தமிழச்சி என்னை கடந்திட,

என் வயிறுமுதல் தொண்டை வரை,

ஒரு ராணுவ ஒத்திகை நடந்திட;

நிம்மதியாய் நீர்த்து போனேன்,

நிம் மதியால் நினைவை இழந்து !

#வினித்_மணிமாறன்

அவளது நினைவுகள்

நிலவில்லா வானில், உன் நினைவுகள் உளவிட

உதிர்கிறேன் ஓர் இதழ் இழந்த ரோஜாவாய்...

சுற்றத்தில் மணமிட்டு உதிர்ந்தாலும்,

உன் நினைவை மனம் இட மறுப்பதேனோ..

இசையது மனதினை மசைத்திட ,
கசையும் கனவுகள் கவிதையாய் கசிந்தாலும் ,

தீராத்தாகத்துடன் தீர்க்கம் செய்து, ஆயுளை தீர்த்திட;
திமிரும் திமிழென திகைக்கும் தமிழன் நான்...

சென்னை நோக்கிய பயணம்

ஊர்தி சாலையில் ஊர,

மழை சாரல் தலையைத் துவட்டி தூர;

அகலும் காற்று என் காதில் காதலை கூற,

நகர்கிறேன்;

நகரம் என்னும் நரகத்தை நோக்கி...

நோக்கம் மாறினாலும், சொந்த ஊரின் ஏக்கம்;

ஈரமான கண்ணை தூக்கமுர செய்தாலும்;

காலம் மாறும் வரை மனதை ஏலம் போகாமல் காத்து;

கருகும் கவிஞனாய், மனதால் உருகும் சிறுவன் நான் !

காதல் தோல்வி ஹைக்கூ

ஒரு நடுத்தர குடும்ப ஆணின்  கருச்சிதைவு ... காதல் தோல்வி...

பெண்கள் தின வாழ்த்துக்கள்

உணர்த்திடும் நட்பாய்,
உருகிடும் தாயாய் ,
உறங்கிடும் சேயாய்,
உறைந்திடும் மனைவியாய்,
உறவினர் பெண்ணாய் ,

ஒவ்வொருவரின் வாழ்விலும் தன் வாழ்க்கையை ஒதியமிடும் பெண்களுக்கு , எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ...

பெண்கள் தினம்



சினிங்கிடும் சிரிப்பில் , ஆணின் மனதை சிதைக்கும் கிறுமி பெண் ...

கனிந்த காலத்தின் கலங்கரை விளக்கமாய், தந்தையின் தாடியை தடவிடும் 

சிறுமி பெண் ...

கவிஞனும் கவிதையும், களவியுற செய்யும் எழுத்தாணி பெண் ...

கலையா மனதையும், கலைத்திடும் கலையது களைந்தவள் பெண் ...

சிறுமையோ பெருமையா, ஒருமையின் இலக்கணம் பெண் ...

தோழமை என்றால், என்பால் மறந்து என் வாழ்க்கையை சீரிடும் வெண்பா பெண்...

என் இனிய பெண் தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் ....

#வினித்_மணிமாறன்