வெள்ளி, 26 அக்டோபர், 2018

இதய துடிப்பு


நாடி வழியோடும் உதிரம் பிரிக்கும் மின்சாரமாய்,
நின் சாரம் என் குருதியோடையில் போதை ஏற்றிட ;
ஏறும் போதை சீரும் செறுக்கில்,
நரம்பின் வரம்புகள் கடந்து கிழித்திட,
கிழியல் அடைக்கும் தட்டனுவில்,
உரிமை கோர உன் பெயர் கிறுக்கினேன் !

நின்பெயர் பதித்த தட்டனு தகர்ந்து,
தகர்வின் நகர்வில் இதயம் அடைந்திட,
துடிக்கும் துடிப்பிலும் துயிலாமல் துயர்ந்தேன்,
உன் நெஞ்சக குழியின் புதையலாய் !


#வினித்_மணிமாறன்

திங்கள், 8 அக்டோபர், 2018

மழை



ஈரத்துளிகளின் இசைவில் இசை சேர்த்து,

மூடிய சன்னலிற்சாய்ந்து மூடா கண்களோடு,

நகரும் நகரத்தில் கொஞ்சிக்குளவும் காதலுக்கு,

இச்சிறு துளியும் இச்சை தீர்க்கும் !

பறக்கும் தூசியை தன்பால் கவர்ந்து,
உருவான உறவாம் மண்ணில் சேர்த்து,

அவை சேர்ந்தநொடி கண்ணீராய் சேராகி !

உலர்ந்து மீண்டும் மேகமாகும் காதற்கரைப்பான் ~ மழை !

#வினித்_மணிமாறன்

புதன், 3 அக்டோபர், 2018

அந்நிய பார்வை

அந்தி வானடக்க, வாடையின் வலுகிறுக்கும்,
வரியற்ற வெண்பாக்கள் பெண்பாலின் கண்விளக்க,

சிரித்து சிறைப்படுத்தும் சிறியாளின் செவிதழ்கள்,
அவள் முறைத்தாலும் வழக்கிழுக்கும்,

பல்வரிசை பதன்படுத்த,
மொழி திரட்டும் பல் இடுக்கில்,
பன்மொழியும் பழமொழிதான் !

இமை வலைந்து வழிவகுக்க,
அவ்விடங்காட்ட புள்ளியிட்டு,
சின்னஞ்சிறு கோலமது,
என்னை சிக்கவைக்கும் சிறுபொறிதான் !

கண்ணிமைக்கும் நொடியதினில்,
இவ்வனைத்தும் நான் கடக்க,
செந்தமிழின்  விழித்திரைக்கு,
நானும் அந்நியன் தான் !

#வினித் மணிமாறன்

செவ்வாய், 2 அக்டோபர், 2018

ஒன்றான ஒரு நொடி

இரவோடு உறவாடி, நிலவொளியின் குளிரளந்து ;
நிலவொலிந்த வேலையிலும், கண்ணிமைக்கா கைபேசி !

என் எழுத்தெல்லாம் அவளிருக்க;
அம்முகம்,
நிதனித்தம் நினைவிருக்க;
எழுந்தெழுந்து நான் கிறுக்க;
கசிவுண்ட பேனா முனை,
என் கண்கசிவை காணாதேனோ !

விடிந்தும் தூங்காமல்,
விதியென ஏங்காமல்,
என் சதியை காணாமல்,
வீழுந்திரந்து போனாலும்,

மண் மசைக்கும் முன்னாலே,
என்னை பெற்றவளின் கருநகலே,
உன் மடிகடத்தி நான் கிடக்க,
இடிகடந்து நீ இறைக்க,
என் உயிர் கடக்கும் ஒருநொடியும்,
ஒன்றான ஓர் நொடிதான் !

#வினித் மணிமாறன்