கை நிறைய காகிதம் இருந்தும், உன்னை
சிறு துனுக்கில் கிறுக்கிட ;
கிறுக்கிய வார்தையணைத்தும், உந்தன்
உதிர் மயிராகிட வேண்டும் !
கையேட்டின் வலப்புரமாய்,
நம் நாட்காட்டி நகர்ந்திட;
உன் சுருள் கூந்தல் நான் நிமிர்த்திட,
நிமிடங்கள் உறைந்திட வேண்டும் !
உன் நெற்றி உரசியுரசி,
நான் வழுக்கை அடைந்திட;
உன் முகக்கண்ணாடியின் கீறல்கள்,
என் இமைமுடியின் கூர்மை சொல்லிட வேண்டும் !
உன் மஞ்சள் என்னுடல் ஏற,
இருக்கியுரசி உறங்கிட,
உன் இதயத் துடிப்பே எந்தன்
நொடிமுள்ளாகிட வேண்டும் !
இவ்வனைத்தும் வெறும் கனாதானென்றால்,
நாம் மாண்டும் வாழ்ந்திட வேண்டும் ....
#வினித்_மணிமாறன்