திங்கள், 27 ஏப்ரல், 2020

மாரி மனம் மாறுமா ?

ஏப்ரல் 26, 2020

எங்கே போய்விட போகிறாய் என்றெண்ணினேனோ ?

இல்லை நம்மவள் தானே என்ற அலட்சியமோ ?

ஏதும் நேராமல் இருந்திருந்தால்...

உன்னோடு இந்நேரம் கதைத்து,

இக்கோடைமழையின் ராக்குளிரில் கதகதத்தது இருப்பேமோ ?

இல்லை என் மாரி நீ இருக்க, 

ஏன் இந்த கோடை மழைக்கு பொறாமையோ; 

என்றெண்ணி இருப்பேனோ !

என் கண் வருடும் பெண்களெல்லாம் அழகென தோன்றலாம்,

அவ்வழகிகள் உன்னழகை ஒத்திருக்கலாம்;

அவர்கள் மேல் கண்டகனக் காதல் கொண்டாலும்,

ஒன்றை நினைவில் கொள்!

என் முதல் காதல் நீ !

ஏப்ரல் 27, 2020 

எதில் தோற்றேன் ?

உன்னழகிலா ?

உன் பேச்சிலா ?

ஆண் என்ற கர்வம் காணாமல் போன கனத்திலா ?

உன் பெண்ணியம் நெகிழ்ந்து,

வரா கவிதையினை கடன்வாங்கி தர முயன்ற நாளிலா ?

கடன்தானே, வட்டி கொடுத்து கொள்கிறேன் ! 

என்னுடமை பொறிக்க முயன்றதை,

சந்தேகமென்றெண்ணி நம் செழிற் நாட்களில்,

கல்யாண கனவை விதைத்து,

அதில் அமிலமழை, வேண்டாம் மாரி !

ஏப்ரல் 28,2020

எல்லாம் கனவோ ?

இவையெல்லாம் நடப்பதை கண்டேன்,

வியர்த்து குளித்து எழுந்தேன்,

பேசிய வார்த்தைகள் தொண்டையில் வெற்றிடமேற்ற,

நீரூற்றி நிறப்பினேன்.

எள்ளும் சொல்லும் என்ற பழமொழிப் பளிச்சிட,

என் கன்னமறைந்தேன் !

அவளிடமா கேட்டாய், நீயா கேட்டாய் ?

ஒருவேளை என் மகனிடம், 

என் காதல் கதை கூறிட,

அதில் காரம் வேண்டுமென்று தான்,

இவ்வதிகாரம் சேர்த்தானோ ?

என்றெண்ணிக்கொண்டு, 

நீ நாளை பேசுவாய் என்ற நிம்மதியான நினைவுடன்,

நித்திரை கொள்கிறேன் !

ஏப்ரல் 29,2020

கணையாழி

நான் உனக்கிட்ட கணையாழி,

கனக்கிறது என் சட்டை பையில்,

என்ன செய்ய, என்னிடம் ஆஞ்சிநேயனில்லை !

நீ நினைத்த நேயனெவனும்,

உண்மையில் நேயனில்லை,

என்று நான் உனக்கு புரிந்திட்ட தவறினேனோ ?

புரிந்துகொள் என் கண்மணியே,

எனக்கென உண்மை பகிர்ந்த,

நண்பன் எவனுமில்லை,

உன்னைக் காணும்வரை !

புதன், 22 ஏப்ரல், 2020

அவன் அணலும் - அவள் மூக்குத்தியும்


முரண் தொகையாய் உன் மூக்குத்தி,
என்னணல் சுருளில் சிக்கிச்சீரிட,
என் ஆங்காரக் கூச்சலை,
அலங்காரமாக்க இதழ் குமித்து,
உதட்டு சாயமதை என்னணலேற்றி,
இம்மாத்திரை நேரமதில் ஏமாற்றி,
இடைகடத்தி விடைபெற முயல்கையில்,

இக்கரம் அழுத்த தெரிக்கும் வளையல்கள்;
என்பெயரை யுன்கரம் கீரிக்கிழிக்கட்டும்... 

உன்னை தொடமுயலும் அயலானிடம்; 
நீ என்னவளென்றுரைக்க !

#வினித்_மணிமாறன்

பொருள் பெற : அணல் - தாடி (Beard)