சனி, 30 டிசம்பர், 2017

என் ஊர் பயணம்




தைத்த நூல் தளர்ந்து காற்றை கதர் கடக்க செய்ய,

தலை கோதிய பொதிகையவள் புது காட்சி நித்தம்தர,

காற்றின் குளிர்ச்சியில் நினைவது சுத்தம் பெற,

உரைக்காற்றின் உருக்கம் உருகாமல் இறுக்கி வைக்க,

சூத்திரம் மறந்தது , என்னவள் காட்டும் புவியின் திறம் காண;

வரவேற்ற கொதிக் காப்பி நாவில் வார கணக்காக மரவுதந்த நினைவு; மறவுர

புகைவண்டிக்கே புகை ஏற்றும் புனிதப் பயணியின் நடுவில்,

அவ்வூர் இவ்வூர் என பெரும் கூச்சலுக்கிடையில்

ஊறும் உறக்கமற்ற உறைப்பொருள் நான்...


#வினித் மணிமாறன்

செவ்வாய், 19 டிசம்பர், 2017

கடற்கரைச் சுவடுகள்




அவள் நினைவில்

நிழலிலமர்ந்த வேளை

சோடிகள் கூடக்கான

கோடி காதல் கண்டும்

ஆழி ஆவென்றிறைந்தது... 

வீழும் சூரியொளி

ஆழிக்கரையோரம் பதிந்த 

சுவடுகளில் நிழல் நிரப்புகிறது ... 

அசைக்கும் குளிர்நீர் பாதங்களை 

நனைத்தும் நுரைத்தும் அசையா 

துளிமண்ணாய் மன்னவன்... 

திடீரென உயிர் பெற்ற சவமாய் 

திடுக்கிட்டு திரும்புகிறான்... 

மன்னவள் பெயருடைய சிறுமியை 

யாரோ ஒரு தாய் உவரும் காற்றில் 

உராயாமல் கரைக்க....

#வினித்_மணிமாறன்

திங்கள், 11 டிசம்பர், 2017

வீழும் பாரதிகள்


வயிற்றின் தாகம் தீர்க்க மண்ணில் ஏரிழுத்தவன்,
ஏறித் தொங்கியும்; அவ்வெடை உணராத தூக்கு கயிறு,

சுழலும் பூமியில் நகரா நகரனாய்,
வாழ உண்ணாமல்; உண்ண வாழ்கையில்,
தன் அடைப்பை நீக்க தெரியாத இதயத் தமணி,

இந்நாட்டான் இழிவடைந்தான் கடல்கடந்து ,
இனமொன்று பினமாக ,
கணம் கணம் சினம் ஏற,

இவ்வெரிச்சல் போதாதென, வலையவன் வீசயில்,
விசைப்படகுகள் ஏந்திய தோட்டாக்கள் தான் எத்துனை !

இதைப் பேச , செவுடனான மாநிலன்,
அவனை வைத்து சாதுர்ய சதுரம் ஆடும் மத்தியன்,

இதற்கிடையில் பிடிமண்ணுக்கும் கை விரித்த காவிரிக்கும்
போராடும் பாரதிகள்,

பிடி மிதித்தே சாகலாம் !


#வினித் மணிமாறன்

சனி, 9 டிசம்பர், 2017

80ஆம் பிறந்தநாள் வாழ்த்துரை

வீரம்மா பெற்றெடுத்தாள்,

வீரமாய் பெற்றெடுத்தாள்!

தகப்பனின் தனிச்சொத்து,

செல்வமாய் பெற்றெடுத்து,

செல்லமாய் இவர் வளர,

செந்தில்நாதனும் பூரித்திருப்பான் !

பழநியின் வேல் கண்டு !

செறுப்பற்ற நடை , செருகற்ற குணம்,

இவ்விரண்டும் இவர் இயல்பு !

தந்தை தாயறிய,

வேலனுக்கு வள்ளி வந்தாள்,

இருவரை கவனிக்க;

இருமூன்றை பெற்றெடுத்தாள்,

இரும்பின் இயற்பியல் !

பெயரன் பெயர்திக்கு,

சோறூட்ட பிசைகையில்,

அண்ணமும் தேன் ஏறும்,

அனுதினமும் நாவூரும்,

அதட்டி தொடை கில்லையிலும்,

தட்டி பொறை நீக்கயிலும்,

இவள் பித்தம்,

வேண்டும் நித்தம் !

புகையாடுப்பு மூட்டையிலும்,

புகையிலையை உருட்டையிலும்,

கூன் கிழமும் கோகிலம் தான் !

பத்தை தீட்டினாலும்,

நான் பத்திரைக்க திட்டினாலும்;

அன்னமொத்த குணவதி,

திண்ணம் அதை நினைவரியும் !

எம்புட்டு வளர்ந்தாலும்,

என் வாயூட்ட நீர் வேண்டும்,

நீர் கடந்த எண்பத்து பத்தாது ,

என் பிள்ளை பத்து வரை,

பாத்திருந்து கொல் அடைக !

#வினித் மணிமாறன்

புதன், 6 டிசம்பர், 2017

புரியாக் காதலின் காதலி


கிழிந்த இதயம்,

விழிக்கசியச் செய்ய;

கழிந்த நாட்கள்,

களைய மறுக்கிறது,

மறுத்தவளின் மருந்தற்ற

மருத்துவ முறையால் !

#வினித் மணிமாறன்

கேட்பார்


மீண்டும் இந்த பாதையில் 
திரும்ப போவதில்லை,
என்றானபின் விட்டுச் செல்லும்
வழித்தடத்தின் மீது, உங்களுக்கென்ன
அக்கரை வேண்டிகிடக்கிறது ?
அது ஊர் கூடும் சந்தையின் ,
எதோ ஒரு மூளையில்
தாயிக்காக ஏங்கி கிடக்கும்
பொட்டை நாய் குட்டிகள் போல்,
கேட்பாரற்று கிடக்கும்...

#ஹரிசரண்

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தமிழை அறிந்த நொடி


பிறந்து முதல் துளி பால் அருந்தும் முன்னே,

என் தந்தை என்னை பற்றி அறியும் முன்னே,

என் உடலின் உறுப்புகள் தோன்றும் முன்னே,

ஒரு செல் உயிரியாய் நான் வீற்றிருந்த கணத்தில்,

என் தாயின் கன்னங்கள் மகிழ்ச்சியில் செறிவடைந்து,

கண்ணில் முதல் சந்தோச கண்ணீரை சிந்த,

அது அவளது வயிற்றில் வந்து வீழ்ந்த பொழுது,

அந்த கண்ணீரின் இதம் கூறியது என் நாவின் உயிர்,

தமிழ் என்று…

#வினித்_மணிமாறன்


அவளை கண்ட நொடி


ததும்பும் பார்வையில் தழுவும் மனம்,

தும்பிருந்தும் பற்றா கன்றென,

கம்பனவன் கண்ட கணையாழிக் காதல்!

கண்டவுடன் கரைகடக்கும், கடிந்தவள் பார்க்கையில்!

அவள் கூந்தல் ஏந்தும் மலர் வீழ்ந்ததும் வாடியது,

உதிர்ந்த மயிரின் உயிர், கணத்தில் மறைந்தது!

சிறைந்த மனம், சிக்கி சிதையுமொலி;

கேட்டும் கடிவாளம் கழழா இதயமொழி ~ அவள்

#வினித் மணிமாறன்