ஊஞ்சல் ஆடுவது போல்,
ஊசலாடி உன்னோடு உறவாடுகிறேன்,
எட்டாத கால் கொண்டு,
எட்டுத்திக்கும் ஏரிட்டு,
உன் பாதம் படு இடம் படாதா என்று !
உன் காதல் கடலின்,
வருமலை என்கால் நனைத்து,
உன் நினைவதை,
பின் செல்கையில்,
என்கால் கீழ் குழி புதைத்து,
வேரேற்றுகிறது;
கடல்மண் போன்ற,
அச்சாரம் அற்ற அரைமனதில் !
#வினித்_மணிமாறன்