நுண் துளி தூரல்கள் என் நுனி முடி நனைக்க;
நினைவுகள் நுண்ணித்தம் நின்னை நீர்மிக்க,
நீர்மமாக நீர்கூழ்மமான நான்..
நீ நின் மனம் விரிக்க மறுப்பதை போல,
கைப்பைக்குள் இருக்கும் குடைவிரிக்க கஞ்சத்தனம் காட்டிலும்,
இந்நித்தம் உன் காச்சல் வருமென ஒதுங்கயில்,
உன்னைப்போலவே சாலையில் மழையை,
ரசித்து நடக்கும் பெண்ணை கண்டதும் நனைகிறேன்...
எனக்கு நனைதல் புதிதா என்ன ?
#வினித்_மணிமாறன்