இளநரை அடைந்து ஏங்குகிறேன்,
அன்று வாங்கி தந்த இளநீர் மீண்டும் கிட்டுமாயென்று ;
நீ தூரம் சென்ற நாட்களில் வந்த காய்ச்சலிடம்,
டெங்கு மலேரியா தோர்த்திருக்கும் !
ஆஸ்பிரின் டோலோ அன்றேது ?
கிழவி நீ கொஞ்சும் சத்தம் போதும் !
என் குடும்பப் பொக்கிஷமே,
வாழ்ந்தவரை மனம் திறக்கா நீ,
சாவின் விளிம்பில் வினவாமல் கூறினாய்,
உன் மனக்கதவின் சாவி நான் என்று !
என்றும் உன் நினைவில்
உன் பெயரன்