ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பாரிஜாதம்


கதிரவன் கதிர் முற்ற,

கருகா தேகம், வாடினாலும் ;

அவள் அழகு வாடாமல்லி !

காரிருள் வான் கவிழ்க்க,

உலகம் கண்மூடி வீண் கழிக்க,

இதழ் நுனி முத்தமிட்டு,

மொட்டாய் முகம் சுழிக்க,

அவள் அழகை விழி களிக்கும்,

களித்த விழி போர் தொடுக்கும்;

இவன் நெஞ்சை பெயர்த்தெடுக்கும் !

காதல் போதை ஏற ,

பேதை முகமுவமி,

கற்பனையில் இயற்றினாலும்,

பெயர் மட்டும் தெரிந்த,

பாரிஜாதம் என்னவள் தான் !

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

தனித்த காதலர் தினம்

முன்பெழுதிய கவிதையின் ஆழம் ,

அடுத்த பக்கம் பதிந்தாலும் ,

அதை படிக்காமல்,

எழுதி தேய்ந்த பேனா முனை,

காகிதத்தை கீராமல் தடவி மொழுவ;

வடிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விடியலை தேட !

கிடப்பில் கிடந்த ஆசைகள் யாவும் அசைக்க நினைக்கிறது,

இருந்தும் அசையா விசையாய் திசையெட்டும் தேடுகிறேன் ,

அவள் கடல் கடந்தாலோ;

நான் அவள் கடல் கடந்தேனோ !

என்று கடைந்தும், கடையா பதிலின் கேள்வியாய் நிற்கிறேன்....

இவ்வாண்டும் காதல் அற்ற காதலர் தினத்தில் !

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

யார் அவள்

காதல் தேக்கி, அதில் காந்தம் ஏத்தி !

காரிருளிலும் என் போர்வைக்குள் விளக்கேற்றி,

என் கைகோர்க்கும் கோர்வையாய்,

என்னை கைதாக்கும் பார்வையாய் !

என் கை தாக்கும் கடவுச்சொலாய் !

கரு மை பூசிய கருமையாய்  !

என் கண் மூட,

செந்திரையில் மிதக்கும் செல் சொல்லும் ;

கவிதை பெட்டகத்தின் அள் அவள் !

அள் ~ பூட்டு

#வினித்_மணிமாறன்

வியாழன், 1 பிப்ரவரி, 2018

பகிரி

பகிரியில் எட்டாம் நிமிடம்,

நான் அழிக்க நினைத்தும்,

எட்டாத குறுந்தகவல் ~ நீ

#வினித்_மணிமாறன்

குளிர்

சாலை நெருக்கத்தில்,

நடுங்கும் குளிரில்,

போக்குவரத்து சமிக்ஞையின் முன் நிற்க,

கனரக வாகனம் தரும் இதச்சூடு ~நீ

#வினித்_மணிமாறன்