சேரா துகல்களை சேர்த்து மைக்கும்,
பேரலையின் சிறு விளைவாய் !
என் வாழ்வின் சிற்றஞ்சிறு,
மகிழ்வினைகளையும் தலைக்கோதி கோர்த்தவளே !
சீரிய சண்டைகளை சிறுவிசையாக்கி,
கூரிய கோபமதை வீரியமற்றதாக்கி,
என் பாழான சொற்களை பகுபதமாக்கி,
என் வளர்ச்சி கண்டவளே,
என்னை காதலனாய் கொண்டவளே;
இந்நிலை வரை நான் கண்டும்,
கண்ணீர் காணாத கன்னங்களில்,
மயிர் வளர கண்ணீர் தெளித்த,
என் கடவுச்சொல்லே...
என்னை கடந்ததேனோ ?
#வினித்_மணிமாறன்
