புதன், 11 டிசம்பர், 2019

பாரதியின் (கண்)மணி


தமிழின் முகவரி உன்பெயர் உரைக்க,

கரைத்த காதல் தேக்கி,
தயக்கமென விழுமாடைதனை நீக்கி,
அடியாழம் அளந்திட,
வியாழன் வரை நாட்கடத்தி,
வெள்ளியதை கிழித்தெரிந்து;

உன் வரவுணரும் நொடியடைய,
இருபத்தி நான்காண்டில்,
உணராத உணர்வனைத்தும்,
ஒருமித்து உயிரேர;

உன் உச்சவம் நிகழ்ந்தேர,
வெள்ளை விழிக்கடலில்,
உன் கருவிழி கரையேற,
நீ கையசைத்து நகர்ந்தாலும்,

உன் கையெழுத்தில் நான் சேர,
உயிற்கடத்தி காத்திருப்பேன்,

என்னை கவித்திடு பாரதியே !

#வினித்_மணிமாறன்