புதன், 28 மார்ச், 2018

பெண் பாரதி


அவள் இருப்பிடம் தேடும் கண்கள்,

அவள் நாற்காலியில் உறங்கிட,

நிமிரா மங்கையை நிமித்தமும் தேடினேன்,

திருட்டும் கற்றேன் அவள் அலைபேசி அடைந்திட,

தேடிக்கண்டேன் தேன்தமிழின் பிரியாளை,

பாரதியின் சிறையாளை,

முண்டாசின் வரியவள் முகவரி,

வெண்காசின் நிறம் அவள் முக ஒளி,

உவமம் பிதற்ற; பிறை திரை சேர,

விடைபெறும் நாளின், விடியலில் உணர்ந்தேன்,

விதியவள் தன்பாதியை பகிர்ந்தவள் என்று !

இருந்தும் மகிழ்ந்தேன்,

மலையேறிய காதல் அவள் செவியேறிய படியால் !

#வினித் மணிமாறன்

வெள்ளி, 23 மார்ச், 2018

காற்சட்டை காதல்


அவள் கண் படாத தலைமறைவு,

தகர்ந்திட, பலமுகம் வருடி என்னை திருடும்,

காலம் காணாத கட்புல வருடி அவள் !

கண்டகணம் மனம் புலவும்,

அம்மாவாசையின் செந்நிலவு !

உடல் பூட்டிய கடல் காதல்,

காற்சட்டை கிழித்தையல் வழி கசித்திட,

மிரட்டி உருட்டும் தோரணைத்தான் 

விரட்டி இழுத்ததோ,

இந்த காற்சட்டை காரணை ?

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 18 மார்ச், 2018

நிரல்யா - எம்மகளின் கனவு



அன்னையின் கை தலையனையாக்கி,

கண்ணயர்ந்த நிரலின் நிழல் கனவுகள்,

கற்பனை கனவிலும் சித்திகரிதாய் சித்தப்பனை,

சித்தா என்றழைக்க தனிச்சிறசு நான் தரித்தேன்,

நீ பல்துலக்க என் கைபேசி கண்ணாடி,

நின் சுமந்து நான் நடக்க,

கடும் கோடையும் என் ஆடி,

உன் ஆசைகள் நிறைவேற,

மழலை மொழியில் நுரையேற,

மிதந்ததும் பறந்தது என் நாட்கள் !

நீர் குமிழியின் நிரமாற்றமாய்;

கடந்த மழலையும்,

என் மடியில் நீ கிடந்த நிழலையும்,

பிடிக்க முயன்ற பொழுதெல்லாம்

சுழற்ற முயன்றும் சுழல்கிறேன்,

காலமெனும் சக்கரமாய் !

#வினித்_மணிமாறன்

வியாழன், 15 மார்ச், 2018

விண் பொட்டு


நின் கண்ணிமைக்க கருமை அழகு,

பச்சையுடுத்தும் முழுமை அழகு,

சிரித்தால் மிளிரும் விண்பொட்டுகளால்,

உன்பெயர் பரணி என்றெழுத்தினானோ பிரம்மன் !

முதல்நாள், கர்வத்தின் காட்சி இவளென்றும்,

இதழ் கேட்க, என் சர்வத்தின் சாட்சியம் இவளென்றும்,

நினைத்து சுழன்ற நாட்கள்,

கடந்தும் நடந்ததுதான்;

பணிப்போர்த்தி உறையும் குளிரில்,

உறங்காமல் உரைத்த காதல்,

பலபிறை கடந்தும் தேயாதிருக்க,

நிலவை நான் அடைந்தும்,

பிளவா தென்றுரைப்பேனே !

#வினித்_மணிமாறன்

புதன், 7 மார்ச், 2018

பெண்கள் தின வாழ்த்துகள்


பேதையாய் செல்லம் பெற்று,

பெதும்பையாய் அடக்கம் கற்று,

மங்கையாய் நாணம் பெற்று,

மடந்தையாய் மானுடம் மயக்கி,

அரிவையாய் கற்று தேர்ந்து,

தெரிவையாய் பெற்றோர் பிரிந்து,

பேரிளம்பெண்ணாய் பெற்றவளாகும் ;

தாய்க்கும் தங்கைக்கும், தோழிகளுக்கும்,

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 6 மார்ச், 2018

கார்மேகம்


மாலை வெயிலின் சாயம் ஏற்று,

நிலவவள் சினுங்க; சிவப்பு கம்பளம் சாற்றி,

நிலவு குடி பெயர,

அவளது போர்வையாய், புடவையாய்,

அழகிற்கழுகு சேர்த்து,

கவிக்கு எட்டாமல் நிலவு மறைகையில்,

மோகமும் கவித்தாகம் தீர்க்கும் !

புவிக்காதல் சோடிகள் நிலவை செரித்து,

களவை கொரிக்கக் காரணி நிலவானால்,

கவி எழுதும் காகிதம் இவனென்பேன்,

பிறர் இறுக்கம் தீர்க்க இவன் தன்சதை பிழிந்தாலும்,

ஒற்றை ஆணாய் எண்திசையும் காதலை தேடும் காதலன் ~ கார்மேகம்

#வினித்_மணிமாறன்

வெள்ளி, 2 மார்ச், 2018

கிழக் காதல்


புடைத்து வரம்பு மீறிய நரம்புகள்
தளர்வுற்று அதிர்ந்திட,

காகிதத்தில் தவழும் பேனாமுனை
இவளது இதயமின் அலைகளை வரைகிறது,

தவழும் பேனா இவள் அழகில் தழுவ,

கிழவனின் கைநாட்டும் கவிதையாகிறது,

ரேகையை இவள் கன்னம் மழுக்கியதால் தானோ !

#வினித்_மணிமாறன்

வியாழன், 1 மார்ச், 2018

பாலைவனம்


பாலை வெயிலின் மணல்துகளாய் மனம்,

உராய்ந்து தேய;

காணும் இடமெல்லாம் அவளது  காட்சி - பிழை !

மதிக் கிளரும் நிலவின் முதிர்ச்சி ,

பதியும் கிரணத்தால் பிதற்றாமல் வருடி,

சென்ற வழியெல்லாம் நிலவும் செப்பளிட !

இதயம் உரைக்கும் பெயரை விழி தேடுகிறது,

குடுவையை  ஏகக்கவிழ்த்தும் அகதியான கடைத்துளி நீராய்,

காலனி தேயும் வரை காத்திருந்து,

அடிவழியேறும் கல்லும் குத்தி காட்ட,

கசக்கிய பணயசீட்டு இப்பொழுது பயணற்ற பயணசீட்டாகிறது !

சிக்கி சிதறும் மனம் அவள் வருகைவரை காத்து,

சிதைவு தவிர்க்க பதமியுண்கிறது !

#வினித்_மணிமாறன்