பிறந்து முதல் துளி பால் அருந்தும் முன்னே,
என் தந்தை என்னை பற்றி அறியும் முன்னே,
என் உடலின் உறுப்புகள் தோன்றும் முன்னே,
ஒரு செல் உயிரியாய் நான் வீற்றிருந்த கணத்தில்,
என் தாயின் கன்னங்கள் மகிழ்ச்சியில் செறிவடைந்து,
கண்ணில் முதல் சந்தோச கண்ணீரை சிந்த,
அது அவளது வயிற்றில் வந்து வீழ்ந்த பொழுது,
அந்த கண்ணீரின் இதம் கூறியது என் நாவின் உயிர்,
தமிழ் என்று…
#வினித்_மணிமாறன்

நான் இந்த கவிதை கேட்டபின் மெய் மறந்தேன்.......உன்மையா சொல்ற என் உள்ளம் தெளிந்த வாத்துக்கள்
பதிலளிநீக்குநன்றி
நீக்கு