திகட்ட திகட்ட உம்மை கிறுக்கி,
அதில் நம்மை மட்டும் பொறுக்கி,
தீர்த்த வார்த்தைகளனைத்தும் கோர்த்து ;
என் ஆசைகள் தீர்த்து பார்த்திட,
மஞ்சள் கயிரொன்றா வேண்டும் ?
சேராது நாம் கடந்த வாழ்வின்,
கனவும் சோர்ந்து போனபின் கூட,
உன்னை சார்ந்து வாழாத நொடிகள்,
கடந்த காலாமானாலும்,
உன் நினைவற்று கிடந்த காலம்,
ஆகாது கண்மணியே !
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக