உன் சிறுசிரிப்பும் ஒரு சிற்றிலக்கியம் !
சிதையா செம்மொழி செவியில் படர்கையில்,
கதையாய் கவிதையாய் வீழும் நாத்தாங்கி நீ !
என் நாளோங்கி, கதிரவன் வீழ,
ஏக்கம் தீர்க்கும் தனியூற்று நீ !
தமிழில் பலபொருள், ஒரு மொழி நீ !
கலகம் நிறைந்த இப்பாருளாகில்,
உன் பெயரின் பொருள் - என் உலகம் நீ !
#வினித் மணிமாறன்
பொருள் : பரணி என்ற சொல் .. தமிழில் ஒரு பல பொருள் ஒரு மொழி அதாவது ஒரே சொல் பல பொருள்களை கொண்டது
நாதாங்கி - நட்சத்திரம் - பரணி
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
உலகம் என்ற பொருளிலும் வழங்க பெற்றது...
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
உலகம் என்ற பொருளிலும் வழங்க பெற்றது...

அருமை ��......மிக்க நன்றி
பதிலளிநீக்குமனமித்த மகிழ்ச்சி...
நீக்குSuper nanbaaaa
நீக்குநன்றி .. கவிஞர் அனிருத்
நீக்கு