எனக்கென யாரும் இல்லை - என்று பலரும் வாழ்வின் பல நிலைகளில் நினைத்து வருத்தமுற்று, முடங்கி யாரின் செயலையும் கண்டுகொள்ளாமல் தனது வட்டத்தை சுருக்கி கொண்டு, தன்னியல்பு துறந்து அமர்ந்திருக்கலாம்.
அப்படியொரு நிலையில்தான் வேலன் அன்று இருந்தான் .
இப்படியொரு நிலையில் எப்படிதான் அவனால் தூங்க முடிகிறது என்று பலரும் கேட்கலாம்.
வேலனின் நிலையில், உடலுக்கு தூக்கம் வேண்டும், மனதுக்கு தென்றல் வேண்டும் என்ற இழுப்பரிக்கு நடுவில்; மருத்துவம் வென்றது.
அவனே தென்றலின் பதிலுக்கு காத்திருக்க நினைத்தாலும், அவன் விழி வறண்டு, இமைகள் கட்டி பிடித்து புணர்ந்தன.
உடலின் சோர்வை ஆங்கில மருந்து பார்த்துக்கொண்டாலும் , மனம் சோர்வு அவனது மனதை தூங்க விடாமல் பலவாறு வருத்தி அங்கும் இங்கும் ஊசலாட செய்து கொண்டிருந்தது,
அந்நேரதில் தென்றல் இவனுக்கு அலைபேசியில் அழைத்து , "நான் உன்னை காதலிக்கிறேன் வேலா; ஆனா நமக்கு இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம், இப்போதைக்கு நல்லா படிப்போம், நல்ல வேலைக்கு போயிட்டு நம்ம வீட்ல பேசலாம், கண்டிப்பா வீட்ல ஒத்துக்குவாங்க. " என்றாள்.
பிறகு வேலன் மகிழ்ச்சியுற்று, வேகமான இதயத்துடிப்புடன், எனக்கு உன்ன இப்போவே பாக்கணும் தென்றல் என்று சொல்லி உங்க வீட்டு பால்கனிக்கு வந்துடு நான் தூரமா நின்னு உன்ன பாத்துட்டு போயிடுறேன் என்றான்.
அந்த அதிகாலையில், தனது வண்டியை எடுத்துக்கொண்டு தென்றலின் ஊரை சென்றடைகிறான், அங்கு அவளது வீடு இருந்த இடத்தில் வேலனின் வீடு இருந்தது, வேலனின் அப்பா அருகில் இவன் முதல் முறை மொக்கை வாங்கிய டீக்கடைக்காரண் இருந்தான்.
வேலன் வண்டியில் அங்கு வந்ததும், அந்த டீக்கடைக்காரண் " இவன் தான் அய்யா நான் சொன்ன பொறுக்கி பய" என்று கை நீட்ட.
வேலன் வேர்வை மழையில் போர்வை நனைத்து எழுந்து அமர்ந்தான்.
(இது போன்ற Teleport கனவுகள் நம்மில் பலருக்கு வந்திருக்கும், ஆனாலும் நான் உங்களின் ஆசைகளை இங்கு இவ்வாறு கொலை செய்திருக்கக்கூடாது மன்னியுங்கள்.
courtesy : தமிழில் கலசம் சீரியல் - Directed by ரம்யா கிருஷ்ணன்
if you want it in international way : நன்றி கிறிஸ்டோபர் நோலன்)
கருவானத்தின் விடியலை நோக்கிய பயணத்தில், அதிகாலை நேரம் 3.30 இருக்கலாம் , அதை confirm செய்ய தன் அலைபேசியாய் on செய்ய mobile screen ஐ double tap செய்தான் வேலன்.
5 missed calls என்றிருக்க, Lockscreen இல் இருந்த ஏஞ்சலினா ஜொலியை ஓரம் தள்ளி, 8436725 என்று 90s காதலர்களுக்கே உரிய விதத்தில் தென்றலின் பெயரை password ஆக enter செய்து உள்நுழைந்தான்.
தென்றல்தான் அழைத்தது என்று தெரிந்த உடன் மேலும் குதூகலம் அடைந்தான்.
தான் அனுப்பிய குறுந்தகவல்களுக்கு ஏதேனும் பதில் வந்துள்ளதா என்று பார்த்தான்.
அதில் எந்த பதிலும் இல்லை..
"புலனத்தை சென்றடைந்தான், அங்கும் பதில் இல்லை..
ஆனால் அங்கும் அவளது அழைப்பு வந்திருந்ததை பார்த்தான்.
பிறகு அவளது Last seen பார்த்தான் " இரவு 12.38 என்றிருக்க, தூங்காம என்ன பண்ணிருப்பா என்று எண்ணிக்கொண்டு;
அவளை இந்நேரதில் தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பத்தில், கையில் செவிக்கூவியுடன் (headphones) பால்கனியை அடைந்தான்.
அதுவரை இல்லாத குழப்பங்கள் அனைத்தும் அவனை பற்றிகொண்டது.
இதுபோன்ற மனநிலையில், பாடல்களின் இசை நம்மை அமைதிக்கொள்ள வைக்கும், ஆனால் பாடல் வரிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்.
பையா திரைப்படத்தில் வரும் "என் காதல் சொல்ல நேரமில்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை என்ற பாடல்" யுவனின் இசையில் அவனை அமைதி கொள்ள செய்தாலும் ; ஆனால் நா.மு விடவில்லை
" ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி, அந்த நிமிடங்கள் நீளட்டுமே ;
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி, எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே;
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன், என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்;
சிறு பிள்ளை என, எந்தன் இமைகள் அது , உன்னை கண்டாலே குதிக்கின்றதே .. " என்று வேலனை உருக்கிவிட்டார்.
(நா. முத்து குமாருக்கு நிகரேது ? சொற்கத்தில் எழுதி தீருங்கள் ஆசானே)
இந்நேரதில் அழைப்பதா வேண்டாமா என்றிருந்த மனநிலையை இந்த பாடல் வரிகள் ஊக்குவித்து அவனை தென்றலை அழைக்க வைத்தது.
பற பற பற பறவையொன்று, என்ற வைரமுத்து வரிகள் caller tune ஆக ஒளிக்க..
மருந்துகளின் பயனாய் கண் திறக்க முடியாமல், தட்டி தடவி தனது அலைபேசியை எடுத்து
"Hello யாரு" என்ற தென்றலின் குறல் அவன் காதில் ஒளித்தது.
அந்த கோடையின் காலை குளிரில் வேலன் நடுக்கத்தை உணர்ந்தான்.
முதல் முறை தென்றலிடம் பேச துடித்த பொழுது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையை 100 மடங்கு கூட்டிய ஒரு உணர்வை உணர்ந்து, வாயில் வார்த்தைகளை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு,
கண் இருட்ட தொடங்கி மெல்ல மயக்க நிலையாய் அடைந்தான்.
வேலன் கண் விழித்தானா ? சற்று காத்திருப்போம் !
#வினித் மணிமாறன்
இது போன்ற உங்களது காதல் பகிர்ந்த நிமிடங்களை comment இல் பதிவிடுங்கள் ! (என்னை தொடர்பும் கொள்ளலாம்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக