நம்பகத்தன்மை.
ஒரு பெண் நட்பென நினைக்கும் உறவு, காதலாகும் பொழுது அவன் மீது அவள் கொண்ட நம்பகத்தன்மை உடைகிறது...
ஒரு பெண் உங்களிடத்தில் மனம் விட்டு பேச எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, உங்கள் மீதான நம்பகத்தன்மையை வியாபார படுத்த, பல பரமபத (சைன் வேவ் யோசனைகள்) யோசனைகளை சிந்தித்து, அதை அவள் மனதில் netflix series போல மீண்டும் மீண்டும் ஓட்டி Binge Watching செய்திருக்கலாம்.
ஆனால் அவள் Binge வாட்சிங் பொழுதில், முடிவற்ற அந்த தொடரை மீண்டும் மீண்டும் ஓட்டினாலும், அதன் வேகம், Dairy Milk Silk ஒன்றை kiss me bgm உடன் உண்ணும் வேகத்தில் உணர்ந்து நம்பகத்தன்மை பெறுகிறாள்.
(இது காதல் வயப்பட்ட பெண்களுக்கு மட்டும் புரியலாம் - புரியவில்லை என்றால் கவலை வேண்டாம் - உங்களவனது Series விரைவில் Release செய்யப்படும்)
தென்றல் உறங்கட்டும் என்று நாம் ஒதுங்கிய நேரத்தில், தென்றல் தூங்கி இருந்தால்; அதில் என்ன பிரமாதம் இருக்க போகிறது !
Universal truth நிகழ்ந்தது, நான் இங்கே தூக்கம் கெட்டு கெடக்கன், உனக்கென்னடி தூக்கம் என்பார்ப்போல; அடுத்த நொடி மேகலை நோக்கி பறந்தது அழைப்பு.
இந்த பாடலை காப்பி செய்ய ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்தவும். கட்டனங்களுக்கு உட்பட்டது...
ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று நா.முவின் வரிகள், அதை கேட்க தொடங்கிய அடுத்த வினாடி; தென்றல் அழைப்பை மேகலை ஏற்று "சொல்லுடி, எப்படி இருக்கே இப்போ" என்றாள் மேகலை.
"நல்லா இருக்கேன் டி "
Tablets போட்டாச்சு தூங்கி எழுந்தா okey ஆயுடுவேன்.
உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. உனக்கு ஒரு Screenshot அனுப்புறேன் அதை பாரு சொல்றேன் என்று தென்றல் முடிப்பதற்குள், யாரு வேலனா என்றால் மேகலை...
தென்றல் நினைத்தும் பார்க்கவில்லை, மேகலை இப்படி ஒரு கற்பூரமாய் இருப்பாள் என்று.
(இந்த இடத்தில் ஒரு வேண்டுகோள்; ஒருவர் எந்த நம்பிக்கையோடு வேண்டுமானாலும் ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்திருக்கலாம், நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள நம்பிக்கையை சம்பாரிக்கவோ, அல்லது அவர்களின் ஆறுதல் வார்த்தைகளை உங்களுக்கு ஏற்றார் போல மாற்று ஒப்புதலுடன் வாங்கவேண்டும் என்ற நோக்கதிலோ; தயவு செய்து அந்த செய்தியை screenshot எடுத்து அனுப்பாதீர்கள். அவ்வாறு நீங்கள் அனுப்பும் நேரத்தில் உங்களை போலவே வேர் ஒருவனும் அவர்களின் நம்பிக்கையை சம்பாரிக்க நீங்கள் அவரை பற்றி என்ன பேசினீர்கள் என்ற screenshot பறக்கவிடலாம்.)
#நினைவில் கொள்ளுங்கள் இவ்வுலகம் மிக சிறியது
#screenshot is injurious to friendship
#screenshot kills privacy
அந்த பகீர் படபடப்பு தென்றலை சற்று திக்குமுக்காட செய்திருந்தது,
ஒரு நிமிஷம் இருடி என்று மேகளையிடம் கூறிவிட்டு, உடனடியாக அலைபேசியுடன் மொட்டைமாடியை அடைந்தாள்.
Water tank இருந்த மூலையை அடைந்தாள், அந்த குளிர்ந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, வானத்தை பார்த்தாள்; ஒளிர்ந்த வெண்ணிலவை வெள்ளை மேகம் மறைக்க, நிலவு தனது வெண்மை இழந்து ஒளிமங்கி காட்சியளித்தது. (தென்றலை வேலன் மங்க வைத்தது போல)
ஆனாலும் கருவானம் விடவில்லை, தனது கருமையால் நிலவை வெண்மையாக காட்ட முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. (மேகலையை போல)
இரண்டு மாடி ஏறியதன் பயனால், 200 மீட்டர் ஓட்டம் ஓடிய பெண்ணாக தனது சூடான மூச்சிகாற்றை, குளிர்ந்த காற்றில் பாய்ச்சி ; சொல்லுடி இப்போ என்றாள் .
மேகலையை இப்பொழுது பதற்றம் பற்றி கொண்டது, ஆனாலும் தோழிகளுக்கே உரிய பாவனையில், என்னடி வேலன்னு சொன்ன உடனே இப்டி மூச்சு வாங்குது என்று ஒரு கீச் சிரிப்பை சிதற செய்தாள்.
எருமை அதெல்லாம் ஒன்னும் இல்ல, வீட்ல யாராச்சும் என்ன பேசுறேன்னு கேட்டுட்டா என்ன பண்றது அதான் மொட்டை மாடிக்கு வந்தேன் என்றாள் தென்றல் .
பாருடா ; புள்ளைக்கு பயத்தை - மறுபடி மறுபடி வம்பிழத்தாள் மேகலை.
அதெல்லாம் இருக்கட்டும் வேலணை பற்றி நீ என்ன நினைக்குற என்றாள் தென்றல் .
"அட நாயே, நான் கேக்க வேண்டியத எல்லாம் நீ கேக்குற ?" என்றாள் மேகலை.
"Eeee.. என்று சிரித்தவாறு, அவன் கூட பேசாம இருந்தப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சுன்னு உனக்கே நல்லா தெரியும்"
அவன் சாதாரண பசங்க மாதிரி இல்லடி, அவன் ஏதோ ஒரு விதத்துல சாதாரண பசங்க கிட்ட இருந்து வித்யாசமா இருக்கான் டி.
அவன் அப்டி இப்டின்னு, விஜய் tv ல கும்கி படத்துக்கு கோபி நாயர் பேசுற வரையறை மாதிரி ஓடியது.
இதையெல்லாம் சளிபில்லாமல் கேட்ட மேகலை, தென்றலை நோக்கி ஒரே ஒரு கேள்வியை கேட்டாள்.
இப்போ வேலன் கிட்ட என்ன சொல்ல போற ?
அவன் கிட்ட நீ அவன காதலிக்கிறேன்னா ?
Final year வந்தாச்சு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 90 நாள் நாமெல்லாம் இப்டி bus ல ஒன்னா போகலாம். அதுக்கு அப்புறம் ?
நீ அனுப்புன, screenshot பார்த்தேன்; அவனே எல்லாதுக்கும் முற்று புள்ளி வைக்கிறான். நீ தேவை இல்லாமல் அரைபுள்ளி போட்டு எல்லாதாயும் தொடங்கி வைக்காத.
இதையெல்லாம் உங்க வீட்ல எப்டியும் ஒத்துக்க மாட்டாங்க, அப்புறம் எதுக்கு தென்றல் இப்டி complicate பண்ணிக்கிற உன்னோட life ah என்றாள் மேகலை .
ஏண்டா இவளுக்கு இந்த screenshot அனுப்பினோம் என்று தென்றலுக்கு தோன்றியது.
ஆனாலும் மணிமேகலையின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவள் இழந்திருந்தாள்.
(காதல் வயபட்ட பலருக்கு இதுதான் பிரட்சனை ; உங்கள் எண்ணங்களுக்கு தோழமை தலையசைக்க வேண்டும் என்றே அவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்கள் கூற வரும் உண்மையான கருத்துகளுக்கு உங்கள் முக்கியத்துவம் செவிசாய்ப்பதில்லை - உங்களுக்கு ஆமா சாமி போடும் தோழமை தான் அப்பொழுது தேவை படுகிறார்கள் - இங்குதான் காதலுக்கு கண் குருடோடு, செவியும் பழுதாகிறது)
இதுவரை வராத தலைவலி தென்றலுக்கு வந்ததாக மேகலையிடம் கூறினாள்.
இங்குதான் மேகலை திறம்பட ஒரு விஷயத்தை கூறினாள், " இங்க பாரு புள்ள, உனக்கு வேலன் தான் வேணும்னா உனக்கு முழுசா உதவி செய்ய நான் தயார். ஆனா எனக்கு உன்னையும் , உன் குடும்பத்தையும் ரொம்ப நல்லா தெரியும்.
நான் இதுவரைக்கும் எது சொல்லி இருந்தாலும் உன்னோட நல்லத்துக்காக மட்டும் தான் சொன்னேன்.
இதயெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம, இப்போ நல்லா தூங்கு.
எடுத்தோம் கவுத்தோம்னு இதெல்லாம் முடிவு செய்ய கூடாது.
நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு.
எனக்கு தெரிஞ்ச தென்றல், ரொம்ப தைரியமான, எதார்த்தமான ஒருத்தி.
சொல்லப்போனா என்ன மாதிரி கிராமத்து புள்ளைங்களுக்கு உத்வேகமே தென்றல் மாதிரி ஆளுங்க தான்."
அப்டின்னு சொல்லிட்டு, நான் ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா என்னய்ய மன்னிச்சுக்க புள்ள என்றாள் மேகலை.
தென்றலுக்கு மணிமேகலையின் மீதிருந்த நம்பிக்கை மேலும் உயர்ந்தது, எந்த screenshot um பகிறாமல்.
(மன்னிப்பு என்ற வார்த்தைக்கு, அவ்வளவு மதிப்பு உண்டு.. என்னதான் friends குள்ள sorry thanks லாம் வேணாம்னு சொன்னாலும் , உங்ககிட்ட மன்னிப்பு கேக்கும் நண்பர்களை இழக்காதீர்கள் - இது போன்ற ஒரு நண்பனை இழப்பது, ஆயிரம் க்ரோத நட்புகளை சம்பாரிப்பதற்கு சமம்.)
நீ எதயுமே தப்பா சொல்லல மணி, இப்டி ஒரு தெளிவு பிறக்கும்னு தான் இந்த நேரத்துலயும், உனக்கு போன் பண்ணினேன் என்றாள் தென்றல்.
நான் இப்போ நிம்மதியா தூங்க போறேன், நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் அத தப்பா நினைக்க மாட்டேன் மணி என்று கூறி அழைப்பை துண்டித்து, வானத்தை பார்த்தாள்..
மேகம் கலைந்து, நிலவு பிரகாசித்தது.
ஆனால் வானத்தின் கருமை மட்டும் ; நிலவின் வெண்மையை எடுதுயம்பி கொண்டுதான் இருந்தது.
(மேகலையையும் சற்று விரும்புங்கள்.. இந்த நேரத்தில், உங்கள் பள்ளி பருவ மேகலையை தொடர்பு கொள்ளலாம். அவர்களிடம் இந்த பதிவு அவர்களை நினைவு கொள்ள செய்தது என்று பகிறலாம்)
#வினித் மணிமாறன்
கருத்துகளுக்கு
+918220829080

கதைகளில் இடையே வரும் உதாரணங்களும்..சிறு கதைகளும்.. எண்ணங்களை திசைதிருப்புகின்றன..
பதிலளிநீக்குஇவற்றை vijay tv மஹாபாரதம் இறுதியில் என் திருடன் (கண்ணன்) கூறுவது போல் சொல்லாம்
அவ்வாறு தினிக்கபடாவிட்டால் அக்கருத்துகள் கருச்சிதைவு அடைகிறது. அதனாலே நாங்கள் அதை குறைமாசக் குழந்தைகளாக வெளியிடும் நிலைக்கு தள்ளபடுகிறோம். உங்களை போல இக்கருத்துகளை புகழ்வோரும் உண்டு, இகழ்வோரும் உண்டு .. கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி ....
பதிலளிநீக்கு