விபத்துகள் நேரும் பொழுது, நமக்கு என்ன நேர்ந்தது என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், தங்களை சார்ந்தவர்க்கு என்ன ஆயிற்று என்று நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, உங்களுக்கு அவர்களின் மீதுள்ள அலாதியான அன்பு தெரிகிறது.
வேலனுக்கு இவ்வாறு நடப்பது முதல்முறையன்று, அவனது பதினான்காம் அகவையில், தந்தையுடன் தீபாவளிக்கு துணி எடுக்க சென்று வீடு திரும்பும் வழியில் பேருந்து விபத்துக்குள்ளாகி, தலைகீழாக கவிழ, இருளில், அப்பேருந்திலிருந்து வெளி வந்து, அவன் தனது தந்தையை தேட, அவர் இவனை தேட ; அந்த கோர சம்பவம் இவர்களை நாட்கணக்கில் வருத்தியது.
அந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் பல வருடங்கள் அவனுக்கு தலைவலி இருந்ததும் உண்டு.
அதே போல ஒரு சூழலைதான் வேலன் இப்பொழுதும் கடந்திருந்தான்.
அதே தலைவலி இவனை அன்று பற்றிக்கொண்டது, ஆனாலும் வீட்டை அடைந்த உடன் தனது கைபேசியை தேடி அவளிடம் பிறந்தநாள் வாழ்த்து கூற முற்பட்டான்.
பதிலளிக்காத காரணத்தால் குறுந்தகவலில் வாழ்த்துகளை பின்வருமாறு ஏவினான்.
"வாழ்வில், எனது அன்னைக்கு பிறகு நான் மதிக்கும் பெண்ணாய், என் வாழ்வில் வந்தவளே. இதுவரை பெறாத இன்பமனைத்தும் இவ்வகவையிலே பெற்று வாழ வாழ்த்துகள்."
அடுத்த 5 நிமிடத்தில்... அடுத்த ஏவுகணை
"என்னால் இயன்ற மட்டும் உனது முகத்தில் புன்னகை விதைக்க முயன்றேன்,முயல்கிறேன், முயல்வேன்..
மணிக்கணக்கான பேச்சு, இதைதான் பேச வேண்டும் இதை பேச கூடாது என்றெல்லாம் நமக்குள் எந்த வரைமுறையும் இல்லாத பொறுப்பு திறப்பை, நான் காதலென்றெண்ணி உன்னிடம் அதை பகிர்ந்தேன்."
"உனது விருப்பம் என்ன என்பதை, என் காதலை பகிர்ந்தவுடன் உன் கண்ணில் கண்டேன், இனி அப்படி ஒரு வார்த்தையை சொல்லி, நமது நட்பை கொச்சை படுத்த விரும்பவில்லை.
மூன்றாம் ஏவுகணை !
என்னால் முடிந்த ஒரே பிறந்தநாள் பரிசு, உன்னிடம் காதல் என்ற சொல்லை பயன்படுத்தி வற்புறுத்தாமல் இருப்பதே"
"Happy Birthday Ilanthenral Srinivasan"
"அதே குழிந்த சிரிப்போடு என்னிடம் பேசும் தென்றல், மீள்வாள் என்ற நம்பிக்கையுடன் உனது நண்பன் வேலன்"
இவ்வாறாக பல குறுந்தகவல் ஏவுகணைகளை தட்டி, தான் உட்கொண்ட வலிமரக்கும் மாத்திரைகளின் மாயத்தில், விழி மூடினான்.
மூடி மூன்றாம் நொடி, தனது கைபேசி சிணுங்குவதை உணர்ந்தான்.
ஆனால் அதை கையிலெடுத்து, யாரென்று பார்க்காமல் On செய்து காதில் வைத்தான்.
(உங்களது ஆர்வம் புரிகிறது... சற்று பொறுமை கொள்ளுங்கள்)
மற்றொரு முனையில், பாலாஜி - மச்சான் எப்படி இருக்க, தலைல ரொம்ப இரத்தம் வந்துச்சே டாக்டர் என்ன சொன்னாங்க ?
நாளைக்கு காலேஜ் வந்துடுவியா என்றான், இவனோ, என்னால முடியல மச்சான்.
Tablets போட்டுட்டேன், தூங்க போறேன் அப்புறம் பேசவா என்றான்.
Sorry மச்சான், நீ தூங்கு நாளைக்கு பேசலாம் என்றான் பாலாஜி.
கையோடு alert slide பட்டனை தள்ள, கைபேசி Silent mode சென்றடைந்தது.
நிம்மதியான உறக்க நிலையை அடைந்தான் வேலன்.
இவன் இருளடைய, தென்றல் விடியல் கொண்டாள் போலும்.
இவனது குறுந்தகவல்களை பார்த்து, இவனை தொடர்பு கொள்ள முயன்றாள்.
அவனிடம் இருந்து பதில் இல்லை.
பிறகு புலனத்திலும் முயன்றாள்..
Ringing என்றே வந்தும், பதில் ஏதும் இல்லை.
நான்கு முயற்சிக்கு பின், முயல்வதை நிறுத்தி.. அவன் அனுப்பிய குறுந்தகவல்களை மீண்டும் படித்து, உறக்கம் கொண்டாள்.
(யாரிடமேனும் ஏதேனும் சொல்ல முயன்று, அதை அவர்களிடத்தில் சொல்ல சந்தர்ப்பம் அமையாமல் போகும் தருவாயில், மீண்டும் அவர்களை பார்க்கும் பொழுது ; நீங்கள் சொல்ல விரும்பிய வார்த்தைகளின் வீரியம் குறையதான் செய்கிறது.
உங்களது ஒருதலை காதலனிடம்/ காதலியிடம் அல்லது crush இடம், சொல்ல முயன்று பல முறை தட்டச்சில் type செய்து, delete செய்யப்பட்ட பல கவிதைகளை போல.)
சற்று அமைதி கொள்ளுங்கள்..
தென்றல் வேலன் உறங்கட்டும்.

சொல்ல சந்தர்ப்பம் அமைவதில்லை.... தட்டச்சு செய்திகள்.. உணர்ச்சி வசப்பட்டது... சொற்களை விட எழுத்துகளுக்கு உணர்ச்சி அதிகம்...(உணர்வுகள் சில சமயங்களில் உதாசீனம் செய்யபடுமோ என்ற அச்சமே.. delete செய்யப்படுகின்றன)
பதிலளிநீக்குஉண்மைதான்... சொற்களின் தேர்வுகளை போல, பெருநரின் தேர்வும் மிக முக்கியமான ஒன்று...
நீக்குதவறான சொற்கள் தவறான ஆட்களை சென்றடையும் பொழுது உதாசீனங்கள் நடப்பதும்.. அதே மனிதர் தனது வாழ்வில் ஏதோ ஒரு நொடியில், உங்களின் உள்ளன்பு தெரிந்து மீண்டும் வந்து நிற்கலாம்.. அப்பொழுது நீங்கள் அவரை ஆரதழுவாமலும் போகலாம்..
கர்மா ஒரு ஊசலாடி...