கோடி பொய் சொல் !
கொஞ்ச பழகிக்கொள் !
சண்டைக்கு காரணமிடு !
காலில்விழுந்து தண்டாலெடு !
மாயபோதையில் மடிந்திடு !
அவள் மடி கிடந்திடு !
மக்களை மற !
மானம் துற !
ஆச்சரியம் அடுக்கிவை !
அவளாசைகளை அடக்கிவை !
செயலனைத்தும் சொல்லிவை !
அவள்மறைக்க தள்ளிவை !
அழுகை கற்றுக்கொள் !
கேள்வி கேட்டுக்கொல் !
கிடைக்கும்வரை நடித்திடு !
கிடைத்தபின் கடிந்திடு !
இவைதான் காதலென்றால்
இக்கனமே கடந்திடு...
காதலேனும் வாழட்டும் !
#வினித்_மணிமாறன்
சிறப்பு சகோ
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநடந்தவை களை நறுக்காய் பொரித்தூட்டாய்
பதிலளிநீக்குநன்றி நானுரைக்க குன்றி வாழ்கின்றேன்
குடும்பத்தில் ஒருவனாய்.
நன்றி
நீக்கு