வலைத்தளம் வலைந்து என் வழித்துணையாய் வந்தவளே !
மூவேந்தர் புடை சூழ,
என் காதல் கடை சூழ,
இக்கார்மேக காரனை,
உன்னோடு இணைக்கத்தான்,
ஈராண்டாய் என்னை கோடையில் கொன்றாயோ ?
உன்கோடையின் வாட்டத்தால்,
சித்திரை மட்டுமின்றி,
நித்திரையும் மாமழை தான்!
என் காதல் நான் உரைக்க,
சுருளியின் நீர் வீழ்ச்சி ;
தாழ்ப்புணர்ந்து வடிந்திடட்டும் !
முப்பதை நான் கடக்க,
பூப்பெய்தும் என் காதல்;
உன்னைக் கனங்கனம் கவித்திடட்டும் !
என் வாழ்வின் காதலர் தினம்
ஆகஸ்டில் நிலைத்திடட்டும்!
இவையனைத்தும் நானுரைக்க,
உன் காதல் வரி இரண்டால்,
என்னை நனைத்திடு கவிக்கடலே !
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக