வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

(ச்+இ)வராத்திரி


விடியல் வான்காண,
போர்வை ஈழ்த்தனைத்து,
உன் நுனிமுடி முகர்ந்து,
தும்மி எழுந்தும்,

மயங்கி - விடியல் கடத்திட வேண்டும் !

என்னை புறந்தள்ளி எழுந்து நகரையில்,
உன்கை,
பிடித்தும் வழுக்கிட,
வேர்வையை வழக்கிட வேண்டும் !

அடுத்த நொடி விழிக்கையில்,
ஈரத்தலையோடு உன் ஒப்பனை
நடந்தேற,
என் நாள் விடிந்தேற வேண்டும் !

ஒப்பனை நான் கழிக்க,
உன் கண்மை வம்பிழிக்க,
நான் உருண்டு எழுந்திட வேண்டும் !

நான் தீண்ட முயல்கையில்,
நீண்ட கைகள் என்னை,
குளியலறையில் சிறைபடுத்த வேண்டும் !

இருள் சூழ்ந்த அறையில்,
உன் வாசம் மட்டும் நிறைத்து,
அவ்வாசத்தால் காசநோயாளியாகிட வேண்டும் !

நோய் கக்க இருள் கடத்தி,
எந்தினந்தினம் சிவராத்திரியாகிட வேண்டும் !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக