திங்கள், 30 ஜூலை, 2018

தாலாட்டு


தூளியில் நான் துள்ள,
என்னை அடக்கி ஆள,
மீட்டப்படும் அடுக்குமொழி கவிதை ;

பொருள் உணரா அகவையிலும்,
நான் அகப்பட்ட இசையற்ற விசை ;

அலுவல் இருந்தும்,
மூர்த்தோன் அழுவல் இருந்தும்,
என் அழுகையே அவள் அழைப்பொலியென ,
பதண்டும் பிதற்றாத பி.சுசீலாவின்,
ஆஸ்கார் பாடல் ;

மாறாத குரலில் பாடும் இவள்,
சுருதியை - யார் மகள் என்பாள்,

கோடி கேட்டும்,
தேடியும் கிட்டாத,
சோடி பொருள்,
என்னன்னையும் தாலாட்டும்...

#வினித்_மணிமாறன்

2 கருத்துகள்: