பாலனாய் - கரைகண்ட காவிரியின் நுறைகண்டு சிரித்து,
மீளியாய் - கலங்கிய நீர் தெளிய; தெளிந்த நாள் உடல் நனைத்து,
நீச்சல் அறிய அந்நீரில் எந்தகப்பனோடு நான் ஊற,
உக்கிரம் தீரா காவிரிக்கு பயந்து,
எம்மையவள் அதட்டி அழைக்க, கரையடைந்து;
ஈரம் உலர்ந்த பின்,
குட்டிக்கரணம் செய்கையில் நான் மறவோன்,
திறவோன் ஆகி விடலை அடைந்தும் அதை விடாத இளம் காளை,
இன்று முதுமகனாகி;
கரைகண்டும் கரையா நினைவுகள் மீண்டும் கிடைத்திட,
விடலையிலே விடாமல் வாழ்ந்திருக்க விழைகிறேன்...
#வினித்_மணிமாறன்
பொருள் விளக்கம்
ஆண்களின் ஏழு பருவங்களும் அதற்குள்பட்ட அகவையும் :-
பாலன் 1 - 7
மீளி 8 - 10
மறவோன் 11 - 14
திறவோன் 15ஆம் அகவை
விடலை 16ஆம் அகவை
காளை 17 - 30
முதுமகன் 30ஆம் அகவைக்கு மேல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக