அம்புவி கண்ட அறும்பவளை, அவராகமின்றி ;
அவரசையை ஆடைகளைந்த காமரக்கன்,
வைத்திய முறையில் அவத்தியமேற்றி,
கண்வருடா வன்புணர்வேற்றி,
கருக்கானா கண்மணியை கற்பழித்து உருகளைத்து ;
கருவறையிலிருந்து,
எமனறை சேர்த்து வைக்க,
எவனடி நினைந்திருப்பான் !
அவள் அசிதன் அறிந்த நொடி,
அக்குருவிலும் ரத்த நெடி ;
அவளசிதன் நான் இல்லை,
என் தமக்கை அவளும் இல்லை,
இருந்தும் இந்த நொடி,
நான் இருந்தென்ன பயனென்றெண்ணியனேன் ?
இம்முறையும் எம்முறையும் இவ்வவத்தியம் செய்தானை,
எம்மகனாய் இருந்தாலும் புணருறுப்பருப்பேனென,
சூழரைகட்டும் ஆண்மை !
#வினித்_மணிமாறன்
தமிழ் அறிக
அம்புவி ~ உலகம்
அவராகம் ~ இச்சையின்மை
அவரசை ~ தங்கை
அவத்தியம் ~ குற்றம்
அசிதன் ~ தகப்பன்
அக்குரு ~ விரல் நுனி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக