வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

யாரென்றே மறந்த பள்ளி நண்பனின் திருமணத்தில் !

மனமேடை பத்தடியில் தானிருக்க,

வரிசையில் பரிசோடு நானிருக்க,


பத்தாண்டு முன்னிருந்த எம்பத்தினியை நான் கண்டேன்,

பட்டினியில் நானில்லை, இருந்தும் மயக்கம்வர,

பத்து நொடிகுள்ளே, பத்தாண்டை கடனிழுத்தேன்,

அசைந்தவள் மேடையேற அசைவிழந்து நானமர்ந்தேன் !


இத்துனை ஆண்டாயும் அவள் நாணம் மாறவில்லை,

அவள் மீதான என் நாட்டம் மட்டும் மாறிடுமோ ?


பத்தடி ஏறியவள் சிரித்து நகர்ந்ததெல்லாம்,

ஆயிரம் வாரணங்கள் என் நெஞ்சை தகர்த்திடவோ ? 


இத்தனை ஆண்டாய் மறைத்து நகர்ந்த நான்,

இன்று மட்டும் பேசிடவா போகிறேன் ?


ஓரமாய் நின்று என்னோடு காதலையும் இளைப்பாற்றினேன் !

வழக்கம்போல !


#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக