செவ்வாய், 20 நவம்பர், 2018

என் முதல் கவிதை

முதல் காதலென நான் கிறுக்க,

கிறுக்கலில் உன் நகத்தடம் கீரிக்கிழிக்குமுன்,

வியர்த்து நின்ற ஒற்றை நொடியை இன்றும் நான் மறவேன் !

பிரித்து சிரித்தாயோ, சிரித்தே பிரித்தாயோ;

என்றறியும் முன்னமே என் முகவரி மாரிட,

ஆயிரம் கவிபடித்தும் உன் முதல்கவி என் கிறுக்கல்,

என்றெண்ணி நகர்ந்தாலும்,

தூரா மேகத்தில் துளியேற்றும் காற்றாய்,

காற்றற்ற அறையில் பறக்கும் காகிதமாய்,

நீரற்ற குடுவையில் கரையும் சிறுகல் நான் !

#வினித்_மணிமாறன்

1 கருத்து:

  1. காற்றற்ற அறையில் பறக்கும் காகிதமாய்,....this means a lot...one of the best scribble in the vinith manimaran blog...spr da nanba

    பதிலளிநீக்கு