வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

முகமூடி நாட்கள்


உன்கரம் கோர்க்க,
மறையற்ற திருகாணியின் சுழற்சியாய்,
என் நாட்கள் கடந்திட,

கூட்டமற்ற தெருக்களின், 
திருப்பு முனைகளில்;

உன்பெயரேற்றிய கடைகளை கடக்கையில்,
முகமூடியோடு கடக்கும் பெண் நீதானென்று,
விழித்து பார்த்து;

ஏமார்ந்து கடக்கும் முடக்க நாட்கள்,
என்னை அடக்கம் செய்த பின்பும்,

முடிவிலி தான் !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக