ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஏழ்மையும் அவளும்

கிழிந்த புடவையின் குறுக்கு தையலில்,
ஏழ்மை - காமம் பிதுங்காமல் கணநேரம் கணக்கெடுக்கும்;

அவள் நகங்கள், நகப்பூச்சை
நளிவிழந்தும் நாடவில்லை !

உதட்டு சாயம் உறங்கிடத்தான்,
எத்துனை வெடுப்புகள் வறண்டிருக்கும் !

ஏழ்மையோ; அத்தேக்கங்களில் தேங்காய் எண்ணெய் தேக்கி வைக்கும்;

கண்டதை கொரித்தாலும் பிறர் 
காணாமல் சிரித்தாலும்,
அவள் கண்ணக்குழியதினில்
இருப்பவுனை தேக்கிடலாம் !

இவ்வேழ்மையின் வர்ணனைக்கு அவள் கண்மைதான் கவிப்பொருளே ! 

இவையனைத்தும் நீ கொண்டும்,
உன்னை எழுதி பதிவிடவே,
என்னை ரசிக்காத கண்ணதினில்,
இக்கவிதை படித்துயியற்றி 
என்னையும் கவிஞனாக்கு !

என் எழுத்தேனும் வரம் பெறட்டும்....

#வினித்_மணிமாறன்

10 கருத்துகள்: