ஓரப்பார்வை முரணிழுக்க,
என்னிளமை எத்தனிக்கும்,
உவமையில்,
அணி இலக்கணம் எங்கேயென !
எடுத்துரைக்க முயல்கையில்,
கயல் கண்ணின் கதிர்வீச்சில்,
நியூட்ரான் நியூசன்ஸ் ஆகும்,
புரோட்டான் புலம்பெயரும் !
என் எலக்ட்ரான் காதல் மட்டும்,
கழிக்குறியில் மொழிபெயர்க்கும்,
இறந்தாலும் இக்காதல்,
பெருஞ்சுவட்டின் அணுத்துளியென்று !
#வினித்_மணிமாறன்
அருமை
பதிலளிநீக்கு