சனி, 18 ஜனவரி, 2020

பொய் மை

உன் மை தூண்டியதும்,
உண்மை பேசிட ஆசை !

இருந்தும் இழைக்கிறேன்,
பொய்யாமொழியதில் மாப்பொய்யினை ;

உன் மூக்குத்தியின் மின்னலோடு,
தொங்கட்டானின் ஒளிக்கவர்ந்து,
வலையளின் உராய்விசையும் இணைகையில்; 

கணத்திடும் இடியோசையும் தோற்திருக்கும்,

உன்வரவை போர்தொடுக்கும் !

உன்பெயர் தெரியாத என்னை பெயர்த்தெடுக்கவோ ?

#வினித்_மணிமாறன்

1 கருத்து: